கிராமங்களிலும் போதை கலாச்சாரம்! நாராயணி பாலாஜி பேச்சு!
கு.அசோக்,
வேலூரில் 1800 மாணவ,மாணவிகள் பங்கு பெற்ற போதை பொருளுக்கு எதிரான மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. அதில் முதலிடம் வந்தவர்களுக்கு ரொக்கபரிசும் அளிக்கப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூரில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தா£.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா,ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் ,வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஓட்டத்தில் 1800-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் கலந்துகொண்டு 8 கிலோ மீட்டர் தூரம் கடந்தனர்.
அண்ணாசாலை,தொரப்பாடி,வழியாக அரியூர் நாராயணி பள்ளியை அடைந்தது. அங்கு பரிசளிப்பு விழா நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலாஜி தலைமையில் நடந்தது.

இதில் தங்ககோவில் நிர்வாகி சுரேஷ்பாபு, நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் ரொக்கபரிசினையும் வழங்கினார்கள்.
முதல் பரிசு 10 ஆயிரம் இரண்டாவது பரிசு 8 ஆயிரம் மூன்றாவது பரிசு 6 ஆயிரம் என பெண்கள் ஆண்கள் குழந்தைகள் பிரிவு என தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது
இவ்விழாவில் நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி பேசுகையில் போதை கலச்சாரம் இப்போது கிராமங்களிலும் வந்துவிட்டது. இதனால் மாணவர்களும் இளைஞர்களும் பாதிக்கபடுகின்றனர் இதனை தடுக்கும் நோக்கில் நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து போதையை ஒழிக்க வேண்டுமென பேசினார் இவ்விழாவில் திரளான பொதுமக்கள் மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர்.

admin
