அதிகாரிகள் ஊழல் செய்தால் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்! விக்கிரமராஜா ஆசை!
ஜி.கே.சேகரன்,
அதிகாரிகள் ஊழல் செய்தால் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், டிமார்ட் நிறுவனத்தை கண்டித்து திருச்சியில் முற்றுகை போராட்டம் இனி ஆன் லைன் வர்த்தகத்தை எதிர்த்தும் போராடுவோம் அமெரிக்க பொருட்களை விற்கமாட்டோம் மக்களும் புறக்கணிக்க வேண்டுமென வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வேலூரில் பேட்டி ஒன்றில் சொன்னார்.
வேலூர்மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல கூட்டம் மண்டல தலைவர் பதவி ஏற்பு கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டல தலைவர் ஞானவேல் புதியதாக பொறுப்பேற்றுகொண்டா£,¢ அப்போது வணிகர் சங்க நிர்வாகி அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை திருப்பத்தூர் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா.¢ இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார்
பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் வணிகர் சங்க பேரமைப்பின் மண்டல தலைவர் பொறுப்பேற்பு விழாவில் வரும் 30 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சியில் டிமார்ட்டை வணிகர்கள் முற்றுகையிடும் போராட்டம் நடக்கும்.
இதில் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் திரண்டு வரவுள்ளனர் டிமார்ட் நிறுவனம் 50 சதவிகிதம் தள்ளுபடி என்று சொல்கிறார்கள். அனைத்து வனிகர்களுக்கும் நேர்மையாக சமமாக விலை தர வேண்டும் ஆனால் டிமார்ட்டிற்கு ஒரு விலை அவர்களுக்கு தனி பேங்கிங்க் என்பது உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் வணிகர்களை கூடாரத்துடன் காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை புறக்கணிக்க வணிகர் சங்கபேரமைப்பு முடிவு செய்துள்ளது. அனைத்து மாநில வணிகர்களையும் பாதுகாக்க தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்.
அதிபர் டிரம்ப் 50 சதவிகித வரி விதிப்பு நாட்டான்மை செய்கிறார், அவருக்கு தமிழக மக்களும் வணிகர்களும் பாடம்புகட்டும் வகையில் அமெரிக்க பொருட்களை வாங்க கூடாது. புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் தெளிவாக சொன்னார் அதை நானும் சொல்கிறேன்.
உள்நாட்டு வணிகர்களை அந்தந்த ஊர் வணிகர்களையும் பாதுகாக்க வேண்டும் இதற்காக தான் வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம்.
27 சதவிகிதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர் இங்கு வாக்காளர்களாக தமிழக மக்கள் இருக்கமாட்டார்கள் என்பதை முதல்வருக்கு எடுத்து சொல்கிறோம்.
30 ஆம் தேதிக்கு பிறகு நாங்கள் மீண்டும் முதல்வரை சந்தித்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அழுத்தம் தர இருக்கிறோம்.
மத்திய அமைச்சர் சொன்னதை போல் இந்தியா எல்லா வளமும் உள்ள நாடு பாகிஸ்தானுடன் போர் செய்த போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட போது துருக்கி நாட்டு ஆப்பிள்களை விற்கமாட்டோம் என முடிவு செய்தது.
தமிழக வணிகர்கள் உணர்வுள்ள வியாபாரிகள் இருக்கிறார்கள் அவர்களை பாதுகாக்க தான் போராட்டம் செய்கிறோம்.
அமெரிக்க பொருட்களை தமிழக மக்கள் வாங்க வேண்டாம் என்ற தீர்மானத்தை கொண்டு வருவோம் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினோம் ஆனால் டிமார்ட் உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் கார்பரேட் கம்பெனி.
இது வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
எல்லா பகுதியிலும் டிமார்ட் இடங்களை வாங்க துவங்கிவிட்டனர் 33 கடைகளை திறந்துவிட்டனர் 100 கடைகள் திறப்பாதாக சொல்லியுள்ளனர். ஆனால் டிமார்ட் கேரளாவில் அனுமதியில்லை ஆனால் தமிழகத்தில் அனுமதித்துவிட்டனர்.
கார்பரேட் நிறுவனங்கள் யார் யாரை பார்க்க வேண்டுமோ கவர் கொடுத்து கவணித்து விடுகின்றனர். வணிகர்களின் போராட்டத்திற்கு சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். ஒரு முனை வரி விதிக்க கேட்டோம் 2 வரியாக பிரிப்பதாக சொன்னார்கள். நாங்கள் 5 -12 வரி என்றோம் அவரும் ஒப்புகொண்டார்.
தவறான வரிவிகித்தால் அரசு அதிகாரிகளுக்கு தான் லஞ்சமாக சென்று சேரும் அமலாக்கத்துறை அரசு துறை அதிகாரிகள் யார் யார் பணம் வைத்துள்ளனர் சொத்து வைத்துள்ளனர் என சோதனை செய்ய வேண்டும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரவுள்ளதை போல் ஊழல் செய்யும் அதிகாரிகள் எதிராக சட்டம் கொண்டு வரவேண்டும்.
முதலில் அதிகாரிகளுக்கு தான் சட்டம் கொண்டு வரவேண்டும் அதிகாரிகள் ஊழல் செய்தால் சொத்துகள் பறிமுதல் செய்து எந்த அங்கிகாரமும் அதிகாரமும் அவர்களுக்கு தர கூடாது.
சட்டம் கடுமையாக்கபட வேண்டும் நகராட்சி கடைகள் வரி வாடகையில் வேறுபாடு இருக்கிறது நாங்கள் முறையிட்ட பின்னர் முதல்வர் லைசன்ஸ் முறையை திரும்ப பெற்றுகொண்டனர் இதற்காக அரசுத்துறை அதிகாரிகளும் வணிகர்களையும் இணைந்து கமிட்டி அமைக்கவுள்ளனர் என சொன்னார்.

admin
