நான்கு மற்றும் இரண்டாம் மனைவிகள் சிநேகிதிகள் ஆனதால் கில்லாடி சிக்கினார்!
க.உன்னிகிருஷ்ணன்,
நான்கு பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்ட பலே கில்லாடி, அவரது கடைசி மனைவின் தோழியான தன் இரண்டாவது மனைவியின் பேஸ் மூலம் மாட்டிக் கொண்டார்.
சிக்கியவர் பெயர் திபு பிலிப். இவர் கேரள மாநிலம் காசர்கோடு அருகே வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் 10 வருடங்களுக்கு முன்பு காசர்கோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்தார். 3 வருடங்களுக்கு மேல் தீபு பிலிப் அவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகளும் பிறந்தன. பின்னர் மனைவியை கைவிட்டு ஓடிவிட்டார்.
அடுத்ததாக அவர் காசர்கோட்டிலேயே மீண்டும் ஒரு திருமணத்தை செய்தவர் ஒரு கட்டத்தில் அவரையும் கழற்றிவிட்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 3வதாக திருமணம் செய்தார்.
மூன்றாவது மனைவியுடன் இருந்த போது ஆலப்புழாவை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் தீபு பிலிப்புக்கு பழக்கம் ஏற்பட்டு 4வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தீபு பிலிப்பின் 2வது மனைவியும், ஆலப்புழாவை சேர்ந்த 4வது மனைவியும் பேஸ்புக் தோழிகள் ஆனார்கள்.
அப்போது தான் 2 பேருக்கும் ஒரே கணவன் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 4வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார்.
இதனால் மனைவி மன்னன் திபு பிலிப் கைது செய்யப்பட்டான்.

admin
