புதையலோ.... புதையல்! புரதான ஆலயங்களுக்கு ஆபத்து! யார் அந்த ஜோதி!

புதையலோ.... புதையல்! புரதான ஆலயங்களுக்கு ஆபத்து! யார் அந்த ஜோதி!

 ஜி.கே.சேகரன்,

 திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு பகுதியில் புதையுண்ட நகரம் மற்றும் பொன் பொருட்கள் அடங்கிய புதை பொருட்கள் இன்றளவுக்கும் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. மிகவும் ஹைடெக்காக ஒரு குரூப் அதை கடந்த 25 ஆண்டுகளாக லவட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 தொல் பொருள் ஆய்வாளர்களின் தகவல்கள்படி நடந்து வரும் இந்த செயல்களைப் போலவே தமிழகமெங்கம் புதையல் எடுப்பதாக பல குழுக்கள் புறப்பட்டுள்ளன.    

 இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கோவிலை புதையல் எடுக்கும் கும்பல் குறிவைத்து அங்கு முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர்.  இதையறிந்த  அந்த ஊர் இளைஞர்கள் அவர்களை விரட்டியிருக்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

 வேலூர்மாவட்டம்,ஊசூர் அருகே சிவநாதபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 5 ஆயிரம் அடி உயரமுள்ள மலையின் மீது மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.

 இந்த மலை முழுவதும் வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள நிலையில் இந்த பழமையான ஆலயம் உள்ள பகுதியில் புதையல் இருப்பதாக அறிந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக மலை மீது கூடாரம் அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு  தூண்களை இடித்து கீழே தள்ளி புதையலை தேடி வந்தனர். சாமி சிலைகளையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

 இந்நிலையில் மாடு மேய்ப்பவர்கள் அளித்த தகவலின் பேரில், சிவநாதபுரத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அம்மலைக்கு  விரைந்துச் சென்று பார்த்தனர்.

 அப்போது அவர்கள் கோவிலில் ஆங்காங்கே இடித்து தள்ளியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த நபர்களிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   அப்போது வேலூர் மாவட்டம், கந்தநேரியில் உள்ள ஜோதி என்பவர் தான் தங்களை அனுப்பியதாக தெரிவித்தனர்.     அப்போது  அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து வந்ததால் 10 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடமுயன்றனர்.  அதில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சேலம் என்றும் மற்றும் கர்நாடக ஆந்திரா பாண்டிசேரி பல பகுதிகளை சேர்ந்த 10 பேர் கும்பல் என தெரியவந்தது.

 பின்னர் அவர்கள் இளைஞர்களை மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

  பழமை மிக்க கோவில்களையும் கோட்டையையும் புதையல் இருப்பதாக இடித்து இவர்கள் புதையல் எடுப்பது வாடிக்கை என கூறபடுகிறது.

  இக்கும்பல் தற்போது வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு புதையல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது எனவே காவல்துறையும் வனத்துறையும் இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்.

  ஆடு மேய்க்க சென்றாலே அங்கும் மிரட்டும் வனத்துறை அதிகாரிகள் இக்கும்பல் 3 நாட்களாக கூடாரம் அமைத்து புதையலை தேடியதை கண்டுகொள்ளாமல் விட்ட மர்ம என்ன என மக்கள் கோருகின்றனர்-

 இது என்ன கேள்வி...? எல்லாம் பங்குதான் ஹி...ஹி.....?