சிறை பிடிக்கப்பட்ட அரசு பேருந்து!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை ஊராட்சியில் சமத்துபுரம் பகுதியில் கிராம மக்கள் அரசு பேருந்து சிறைபிடித்து போராட்டம் வெளியூர் நபர்களுக்கு வீட்டு மனை வழங்குவதை கண்டித்தும் அந்த இடத்தில் சுடுகாடு சுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைக்க கோரி போராட்டம் நடத்தப்பட்டது,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வீடுகள் இல்லாமல் பலர் கூட்டு குடும்பங்களாக உள்ளனர்.
மேலும் இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மயான வசதி இன்றியும், ,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத தால் அவசர சிகிச்சை பெற சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமநாயக்கன்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழக ஆந்திரா எல்லையில் பாட்டூர் பண்டாபட்டு ,கொள்ளப்பள்ளி,உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கூடிய சிலருக்கு வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதே பகுதியில் உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தில் சுமார் 4 ஏக்கர் அரசு இடத்தில் இங்கு வீடு இல்லாமல் உள்ள 200 க்குன் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும், மயான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்குள்ள இந்த அரசு இடத்தில் நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு இங்கு வீட்டுமனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த இப்பகுதி மக்கள் வாணியம்பாடியில் இருந்து திம்மாம் பேட்டை மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் முக்கிய பிரதான சாலையில் அமர்ந்து அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டி.எஸ். பி மகாலட்சுமி தலைமையில் திம்மம்பேட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

admin
