அண்ணா சிலை முதல் ஏர்போர்ட் வரை வக்பு சொத்து! ஷேக் தாவூத் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
சென்னை அண்ணாசிலை முதல் ஏர்போர்ட்வரை வக்பு சொத்து, வக்பு வாரிய சட்டத்திருத்தம் வரவேற்கதக்கது அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய ஓவைசி வக்ஃபு வாரிய சொத்துக்கள் பல கோடியை தன் வசம் வைத்துள்ளார் - காட்பாடியில் தமிழ்மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் பேட்டி
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழ்மாநில முஸ்லிம் லீக்கின் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா என்பது வரவேற்கதக்கது ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே வக்க்பு வாரியத்தில் பெண்களை நியமித்தார் இது நாட்டிற்கு முன் உதாரணமாக மாறியது.
5 ஆண்டுகள் இஸ்லாமியர்களாக மாறியவர்கள் நடைமுறைகளை கடைபிடித்திருந்தால் அவர்கள் சொத்தை வக்புக்கு எழுத முடியும் சொத்தை காப்பாற்றிகொள்ள அண்ணன் தம்பி பிரச்சணை சொத்தை எழுதி வைக்கலாம் என்றும் உள்ளது.
தன் பெயருக்கு இல்லாத சொத்தை வக்க்பு செய்ய முடியாது என கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் வக்ஃபு வாரியத்தில் இரு பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் இதில் ஜெயலலிதா காலத்தில் பைதர் சையத்தை வக்பு வாரிய தலைவராக நியமித்தார்.
இந்தியாவிலேயே தமிழகம் முன் மாதிரி அதற்கு இது முன் உதாரணம், தமிழகம் எடுத்து காட்டாக உள்ளது வக்பு செய்த சொத்தை 90 நாட்களுக்குள் ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனா.
¢ இதுவரையில் வக்பு சொத்து என்பது மர்மமாகவே இருந்தது ஆனால் இப்போதைய சட்டபடி வக்ஃபு செய்தால் ஆன் லைன் போர்டடில் போட வேண்டும் இரண்டாவது அரசு அலுவலகம் எழிலகம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் அண்ணா சிலை முதல் ஏர்போர்ட் வரையில் வக்
பு சொத்துக்கள் தான்.
அதற்கான ஆதாரம் வக்புவிடம் உள்ளது அதே போல் திமுகவின் அறிவாலயம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் எல்லம வக்பு சொத்தில் வருகிறது.
திருச்சி திமுக அறிவாலயம் வக்பு போர்டு சொத்து என்பது தெரியவந்துள்ளது. அரசு கட்டிடங்கள் நிறைய உள்ளது அதை வக்பு சொத்து என சொல்ல முடியாது தாஜ்மஹால் வக்பு சொத்து என சொன்னார்கள்.
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியும் வக்ஃபு சொத்து அது தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளதாக. அதிமுக அரசு சொன்னதும் கடிதம் உள்ளது அதே போல் வக்பு வாரிய சொத்துக்களை யார் எல்லாம் பராமரிக்கின்றனர் என்பது குறித்து ஆன் லைன் போர்டடில் பதிவிட வேண்டுமென சொல்லியுள்ளனர்.
அதன் வருமானம் யாரிடம் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் சின்னி ஷியா உள்ளிட்ட இஸ்லாமியர்களாக இருந்தாலும் சில இமாம்களை பின்பற்றுபவர்கள் இவர்கள் எல்லாருக்கும் வக்ஃபு உள்ளது.
இவர்கள் எல்லாரும் ஒரே வக்புவுக்குள் வரவேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. அதே போல் மத்திய மாநில அரசுகளின் தணிக்கைக்கும் ஒத்துகொள்ள வேண்டும் வக்பு வாரியம் இதை தணிக்கை செய்ய முடியாது என சொல்ல முடியாது.
மேலும் நீதிமன்றங்களில் பத்திரங்களை காட்டி இது வக்பு சொத்தில்லை என்றால் உங்கள் சொத்துக்களை நீங்கள் மீட்டுகொள்ளலாம்.
இந்த 10 சட்டத்தையும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்கிறது இது மக்களுக்கான சட்டம் ராணுவம்,ரயில்வே அடுத்து மூன்றாவது வக்பு சொத்துக்கள் தான் அதிகம் உள்ளது.
1994ஆம் ஆண்டு சச்சார் கமிட்டி சொல்வது என்னவென்றால் அனைத்து இஸ்லாமியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டு. அப்போது 1 லட்சம் கோடிக்கு மேல் உள்ள வக்ஃபு சொத்தில் வரும் 10 சதவிகிதம் வருவாயை 11 ஆயிரம் கோடியை பிரித்துகொடுத்தால் இஸ்லாமிய மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறியிருப்பார்கள்.
வக்ஃபு மூலம் நிதி தந்து கல்வி தரவில்லை இந்தியா முழுவதும் சச்சார் கமிட்டி பரிந்துரை நடைமுறைக்கு வரவில்லை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக பரிந்துரையை யாரும் அமுல்படுத்தவில்லை இதனை ஏன் இஸ்லாமிய மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் ஓவைசி ஹைதராபாத்தை சேர்ந்தவர் அவர் எம்பியாக உள்ளார் அவர் பாராளுமன்றத்தில் பேசும் போது என்னை இங்கேயே சுட்டுவிடுங்கள் மசூதியை பிடுங்கி கொள்ளுங்கள் கபர்ஸ்தானை பிடுங்கிகொள்ளுங்கள் என ஆவேசமாக பேசுகிறாரெ.
ஆனால் அவரே பல கோடி மதிப்புள்ள வக்பு சொத்துக்களை அவர் கட்டுபாட்டில் வைத்துள்ளார். இது தெலுங்கு படத்தை பார்ப்பது போல் உள்ளது. அவர் பிஜேபியுடன் சேர்ந்து காபி டீ சாப்பிடுகிறார் காங்கிரசில் உள்ள பெரிய புள்ளிகளும் வக்பு சொத்தை வைத்துள்ளனர்.
இது இந்திய மக்களுக்கு சொந்தமானது மதங்கள் ஜாதிகளை கடந்து ஏழை மக்களுக்கு வக்பு சொத்தில் ஏன் கொடுக்கவில்லை எதுவும் செய்யவில்லை என வெள்ளை அறிக்க வேண்டும்.
இதனை யார் வைத்துள்ளனர் என அரசு பார்க்க வேண்டும் வக்பு சொத்து மூலம் தனி நபர்கள் சம்பாதித்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த சட்டத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அவ்வாறு வக்ஃபு சொத்தை அபகரித்தவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்க வேண்டும்.
வக்ஃபு சொத்துகளை வைத்திருக்கும் பணக்கார முதலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறைவன் சொத்தை அதாவது சிவன் சொத்து குல நாசம் என்பதை போல் இறைவன் சொத்தை திண்றவர்களை வாழவிட கூடாது.
ஏழை ஏழையாகவே வாழ வேண்டுமா மேம்பாடு என்பது கூடாதா வக்ஃபு சொத்துக்களில் வரும் வருமானத்தை மக்களுக்கு பிரித்துகொடுங்கள் மேலும் என்.ஆர்.சி போன்ற சட்டங்களை புரிந்துகொள்ளாலாம் இஸ்லாமியர்கள் சிலர் போராட்டம் ஆர்பாட்டம் செய்கின்றனர் என சொன்னார்.

admin
