ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே சாப்பாடு...அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே சாப்பாடு...அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 கு.அசோக்,

  கலைஞர் சுயசரிதையில் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தார் ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவர் வழி நடக்கவில்லை என மத்திய அமைச்சர் கூறுவது சிறுபிள்ளை தனமானது - ஒரே நாடு ஒரே தேர்தல் வராது அதே போல் ஒரே சாப்பாடு ஒரே சாமியாரும் வராது - காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி      - விரைவில்  புதியதாக கட்டப்பட்ட அரசு பெண்ட்லேண்ட்வேலூர் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கபடும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

 வேலூர்மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில், ரூ. 1.20 கோடி மதிப்பில்கட்டப்படவுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கான பணியை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்து பேசினார்.  சிறப்புரையாற்றினார்.

 வேலூர் மாநகராட்சி மண்டலம் 1, வார்டு எண் 10 காங்கேயநல்லூர் பகுதியில்தேசிய நகர்ப்புற சுகாதார குழும திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் மதிப்பில்புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த சுகாதாரமையமானது 322.53 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.

  இக்கட்டிடத்தில் அறுவை சிகிச்சை அறை, பிரசவ அறை, மருத்துவ பரிசோதனை கூடம், அவசர சிகிச்சைஅறை, ஸ்கேன அறை, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், இருப்பு அறை மற்றும்கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன இதனை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

  இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்பு லெட்சுமி ,சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில், மாமன்ற உறுப்பினர் அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

    இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காட்பாடியில் தான் கொண்டு வர இருந்தோம் ஆட்சி மாற்றம் காரணமாக அது அடுக்கம்பாறைக்கு சென்றுவிட்டது.

   தற்போது வேலூர் மக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை அதி நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அது திறக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதே போல் காட்பாடி தொகுதியில் சேர்க்காட்டில் 100 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக நான் திறந்து வைக்கவுள்ளேன் என பேசினார்

    பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் சுய சரிதையில் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தார் ஆனால் ஸ்டாலின் அவர் வழியில் நடக்கவில்லை என மத்திய அமைச்சர் குற்றம்சாட்டுவது குறித்து கேட்டதற்கு இதெல்லாம் சிறுபிள்ளை தனமான பேச்சு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வராது நமக்கு காட்பாடியில் இருக்கும் பிரச்சணையே அதிகம். இதெல்லாம் ஒரே நாடு ஒரே மொழி ஒரே சாப்பாடு ஒரே சாமியார் என்பது போல் தான் என கூறினார்.