எம்.எல்.ஏ.க்களுக்கு இலவசம்ங்க அண்ணாமலை:- பேருந்தில் முதல்வருக்கு டிக்கெட் விவகாரம் அய்யகோ?

ம.பா.கெஜராஜ்,
பேருந்தில் முதல்வர் டிக்கெட் வாங்கினாரா என்று பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை அலார்ட்டா ஒரு கேள்வி கேட்க, அதற்கு திமுக கழுவி ஊத்தியிருக்கிறது.
இது குறித்த விவரம் வருமாறு,
திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கோபாலபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற கையோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 29 சி எனும் அரசு பேருந்தை நிற்கவைத்து, காரிலிருந்து இறங்கி அந்த பேருந்தில் பயணிகளுடன் பயணம் செய்தார். மேலும் இலவச பயணம் குறித்து நிறைகளையும் குறைகளையும் அந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அப்போது, இலவச பயணம் மேற்கொள்ள ஏதுவாக அதற்குரிய பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என மகளிர் கோரிக்கை விடுத்தனர்.
அப்படியிருக்க முதல்வரின் பஸ் பயணத்துக்கு டிக்கெட் வாங்கினாரா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது என்கிற விதி இருப்பது கூட அண்ணாமலைக்கு தெரியவில்லையே என்று திமுக வின் ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.