வேட்டைகாரரின் துப்பாக்கியில் சுட்டு பார்த்த வன அதிகாரிகள்!
ஜி.குலசேகரன்,
குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த மூன்று நாட்டு துப்பாக்கி மயில் இறகு மற்றும் முயல் வலை டார்ச் லைட் பறிமுதல் ஒருவர் கைது- பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி இருந்த குண்டை வனத்துறையினர் வெடிக்க வைத்து போலீஸிடம் ஒப்படைப்பு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி கிராமம் அருகே வனப்பகுதி ஒட்டிய கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த விவசாய நிலத்தில் செம்மரம் சந்தன மரம் தேக்குமரம் தென்னை உள்ளிட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கோவிந்தசாமி தற்போது குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருவதால் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கொட்டாரமடுகு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் குடும்பத்துடன் காவலாளியாக இருந்து விவசாய நிலத்தை பராமரித்து வருகிறார்.
மேலும் விவசாய நிலத்தில் காவலாளியாக உள்ள கோபி என்பவர் அவ்வப்போது வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக, வேலூர் தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வேலூர் மற்றும் குடியாத்தம் வனத்துறையை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் உப்பரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
அங்கு 2 நாட்டு துப்பாக்கி குண்டுகளுடன் லோடு செய்து உள்ளதும் மேலும் பயன்பாட்டில் இல்லாத 1நாட்டு துப்பாக்கி உட்பட மூன்று நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி மருந்து மயில் இறகு, முயல் வலை, டார்ச்லைட் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்து விவசாய காவலாளி கோபியை கைது செய்தனர்.
பின்னர் குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு நாட்டு துப்பாக்கில் இருந்த குண்டை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் வெடித்து நாட்டு துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 3நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

admin
