மாவட்ட தலைவர் போட்டியில் 10 நபர்கள் மனு! காங்கிரஸில் தான் சார்!

மாவட்ட தலைவர் போட்டியில் 10 நபர்கள் மனு! காங்கிரஸில் தான் சார்!

கு.அசோக்,

 சோளிங்கர் தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர்  . சீலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் தலைமையில் நிர்வாகிகள்  நியமன ஆலோசனை நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் இணை அமைச்சர் இந்தியாவில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் அதற்காக காங்கிரஸ் கட்சியினர் முழு மனதோடு பணியாற்ற வேண்டுமென கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

 அதைத்தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட தலைவருக்கான நியமன விண்ணப்பங்கள் பெறப்பட்டது இந்த விண்ணப்பத்தில் மாவட்டத்தில் 10 பேருக்கான தலைவருக்கான போட்டி விண்ணப்ப படிவம் தரப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இதில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு மாவட்ட தலைவரை தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் இணையமைச்சர் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கட்சியில் மறு சீரமைப்பு நடைபெற்று வருவதாகவும் அதன் பணிகளை முன்னெடுத்து தற்போது செயல்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக சோளிங்கரில் இந்த மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் சொன்னார்.

  இதில் மாவட்ட தலைவருக்கான போட்டியில் 10 நபர்கள் மனு வழங்கியதாகவும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிர்வாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் கூடிய விரைவில் கட்சி மறு சீரமைப்பு அமைக்கப்பட்டு சிறப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக குறினார்.

  அப்போது நகர தலைவர் கோபால்,மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், ஒன்றிய தலைவர் கார்த்தி நகராட்சி கவுன்சிலர்கள் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.