ஆபாசமாக பேசிய எம்.எல்.ஏ.! தொகுதி மக்கள் வெறுப்பு!
டி.ஜி.சாந்தா,
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எபிநேசர்.
இவர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு சிக்னல் அருகே குழுமியிருந்த மீனவ பெண்களிடம் கோபமாகவும் ஆவேசமாகவும் ஙோ..... என அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.
ஓட்டு போட்ட மக்களுக்கு இதுதான் பரிசா? என்று அம்மக்கள் பரிதாபமாக கேட்கிறார்கள்.
எதற்காக இப்படி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று விசாரித்த போது, ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளை இன்றைக்கும் கிராமமாக கணக்கு வைத்து, அங்கெல்லாம் தலைவர்களை நியமிப்பார்களாம்.
இந்நிலையில் அங்கு பணம் பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிரான நபரை தலைவராக நியமித்துவிட்டதாக அவரை கேள்வி கேட்டனர்.
இதனால் அவர் ஆவேசமடைந்த அவர் இப்படி ஆபாச வார்த்தையை டெலிவரி செய்துள்ளார்.