கிறிஸ்தவர்களுக்கு 10. 5 வேண்டும்! ஐசக் ஐயா வேண்டுகோள்!
கு.அசோக்,
சோளிங்கரில் கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க கோரி கிறிஸ்தவ மக்கள் ஆர்பாட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அகில இந்திய ஜனநாயகம் மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆஃப் இந்தியா சினாட் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய ஜனநாயகம் மக்கள் கட்சி தேசிய தலைவர் ஐசக் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கிறிஸ்தவர்களுக்கு10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் செய்யகூடாது.
சிறுபான்மை கிறிஸ்தவ பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பள்ளி நிர்வாகம் நிரப்ப அரசு ஆணை அளிக்க வேண்டும்.
அரசு கலைக் கல்லூரியில் ஷிப்ட் முறையில் வகுப்புகள் ரத்துப்பட செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

admin
