வெற்றி பெற்ற மாணாக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கலெக்டர் பாராட்டு!
ஜி.கே.சேகரன்,
10 ,11,12 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கும் 100 சதவிகிதம் தேர்ச்சியை அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா - தேர்ச்சியடைந்த நீங்கள் அனைவருமே உயர் கல்வி பெற வேண்டும் - பள்ளிகள் திறந்த அன்றே புத்தகங்கள் வழங்க நடவடிக்கை ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 10 ஆம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற19 பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா மற்றும் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கும் தங்களது பாடங்களில் 100 சதவிகிதம் தேர்ச்சியை அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,முதன்மை கல்வி அலுவலர் தயாளன்,மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் கேடயங்களும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன, இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் 10.11,12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற நீங்கள் அனைவரும் உயர் கல்வியை பயில வேண்டும் இந்த தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி காட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.
அடுத்த கல்வியாண்டில் இம்மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைவரும் நூறு சதவிகிதம் தேர்ச்சி அடைய ஆசிரியர்கள் நீங்கள் பாடுபட வேண்டும்.
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து புத்தகங்களையும் முதல் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
12-ஆம்வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர நீங்கள் அதற்குரிய முயற்சிகளை செய்ய வேண்டும் அரசு உங்களுக்கு பல நலத்திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென பேசினார்.

admin
