அரசு இடத்தில் 5 கோடி ரூபாயில் லாட்ஜ்! நீதிமன்ற உத்தரவை மதிக்காத நகரமன்ற தலைவர்!
கு.அசோக்,
அரசு நீர் நிலை நிலத்தை அபகரித்து லர்ட்ஜ் கட்டும் சோளிங்கர் நகராட்சி தலைவரான திமுகவை சேர்ந்த தமிழ் செல்வி அசோகன் மீது நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தை மீட்க கோரி மனு அளித்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பிர்க்காவுக்கு உட்பட்ட வருவாய் தீர்வாயம் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் வட்டாட்சியர் செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
சோளிங்கர் பிர்காவைக்கு உட்பட்ட பொதுமக்கள் தனிநபர் தேவைகள் குறைகள் பொது தேவைகள் உள்ளிட்ட மனுக்களை பலர் அளித்தார்கள்.
இந்த நிலையில் கொண்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவர் ஜமாபந்தியில் ஒரு பரபரப்பான மனு அளித்தார். அந்த மனுவில் சோளிங்கர் நகரில் யோக லட்சுமி நரசிம்மர் ஆஞ்சநேயர் மலைக்கு செல்லும் வழியில் தக்கான் குளம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் வளைத்து அதில் ஐந்து முதல் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதி கட்டி வருகிறார்.
சென்ற வருட ஜமாபந்தியில் இதே போல் மனு அளித்ததாகவும் அதன் மீது அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சோளிங்கர் கொண்டபாளையம் நகரச் சேர்ந்த சின்னையன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது உயர் நீதிமன்றம் உடனடியாக அரசுக்கு சொந்தமான 645/2 சர்வே எண்ணில் உள்ள சாலைகள் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமித்து மூன்றடுக்கு தங்கு விடுதி கட்டி வருவதை தடுத்து நிறுத்தி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என டபள்யூ.பி. . எண் 26425/2024 உயர் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுவரையில் அக்கட்டிடம் இடிக்கப்ப்டாமல் உள்ளது.
அப்படியிருக்கதிமுக மாவட்ட அவைத் தலைவராக இருந்த காரணத்தினாலும் இவருக்கு பெரிய இடங்களில் செல்வாக்கு இருப்பதினாலும் அதிகாரிகளை மிரட்டி கட்டிடத்தை இடிக்காமல் தடுத்து வருவதாக புகார் மனுவினை அளித்துள்ளார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர போவதாகவும் இம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

admin
