பானி பூரிகடையில் கவிழ்ந்த லாரி!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே ரேஷன் அரிசி லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை ஓட்டுநர் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையோரம் இருந்த கடைகளில் மீது சாய்ந்ததில் முதியவர் படுகாயம்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து தட்சணாமூர்த்தி என்பவர் லாரியில் 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சென்றது.
அப்போது ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் சாலையில் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதமல் இருக்க லாரி ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி லாரியை திருப்பிய போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் சாலையோரம் இருந்த பானிப்பூரி கடை மற்றும் வடை, மற்றும் திண்பண்டங்கள் செய்யும் கடை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சாலையோரம் கடை வைத்திருந்த ஜமில் என்பவர் மீது விழுந்ததில் அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஜமீல் மற்றும் லாரி ஓட்டுநர் தட்சிணாமூர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா.
பின்னர் அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சையிற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து சாலையில் கவிழ்ந்ந லாரியை கிரேன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர் மீட்டு, சாலையில் கொட்டிய ரேஷன் அரிசி மூட்டைகளை மாற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பினர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

admin
