மாணவியா? மனைவியா செக்ஸ் புகாரெல்லாம் பொய் என பொதுக்கூட்டம்!

மாணவியா? மனைவியா செக்ஸ் புகாரெல்லாம் பொய் என பொதுக்கூட்டம்!

கு.அசோக்,

மாணவி மாணவி என்று சொல்வது தவறு அவர் இன்னொருவருடைய மனைவி ஆவார். ஏற்கனவே ஒருவரிடம் பணத்தை கறந்தது போல் இவரிடமும் கறக்க திட்டம் என அமைச்சரின் மகன் வினோத் காந்தி குற்றச்சாட்டு.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக நிர்வாகியாக இருந்த தெய்வா (எ) தெய்வசாயல் என்பவர் மீது அவருடைய மனையும் மாணவியுமான ப்ரீத்தி என்பவர் பாலியல் புகார் அளித்து வந்தார். ஆளுநர் வரை நீண்ட அந்த புகார்களுக்கு பின்னணியில் அதிமுக இருப்பதாக பரவலாக கூறப்பட்டு வந்தது.

  இந்நிலையில் திமுக நிர்வாகியை கண்டித்து அதிமுக ஆர்பாட்ட்டம் எல்லாம் நடத்தி அவை பிசுபிசுத்தன.

  இந்நிலையில் இதனை கண்டித்து திமுக சார்பில் அரக்கோணத்தில் பொதுக்கூட்டம் ஒன்றூ நடத்தப்பட்டது.

  அதில்  பொள்ளாச்சி அவலத்தை மறைக்க அரக்கோணத்தில் அதிமுக கபட நாடகத்தை கண்டித்து என்ற தலைப்பில்  கண்டன பொதுக்கூட்டம் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில்  நடைபெற்றது.

   இதில் மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

 கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி கலந்துக் கொண்டு பேசுகையில்,

மாணவி மாணவி என்று சொல்வது தவறு என்றும் அவர் இன்னொருவருடைய மனைவி ஆவார் என தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே முதல் கணவரிடம் வன்முறை வழக்கில்  கடந்த ஆண்டு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு பெற்ற நிலையில்,அதேபோல் இவரிடமும் என தெரிவித்தார்.

  மேலும் இருவருக்கும் திருமணமாகி கோயிலுக்கு நன்கொடை கொடுத்த விவரங்கள் சேகரித்து வைத்துள்ளதாக சொன்னார்.

  மேலும் கடந்த ஐந்தாம் தேதி அன்று மாணவி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் கல்லூரியில் தேர்வு எழுதியதாக ஹால் டிக்கெட் உள்ளதாக தெரிவித்தார்.

பொய் மூட்டை அவிழ்த்துவிட்டு திமுகவை நீ ஒன்றும் பண்ண முடியாது என வினோத் காந்தி பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.