சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்!

ம.பா.கெஜராஜ்,
இன்று (16.03.2022) வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் பாரத சாரண சாரணியர் நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஊரிசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, ஈவேரா நாகம்மையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கெடுத்தனர்.
பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி , வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.செந்தில்குமார், மாண்புமிகு வேலூர் மாநகராட்சி மேயர் திரு.மதி.சுஜாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு) திரு.ப.கார்த்திகேயன் (வேலூர்) மாநகர நல அலுவலர் மரு-மணிவண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பேரணியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ஆர்.மோகன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் திரு.செ.நா.ஜனார்த்தனன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.எஸ்.சிவ வடிவு, பாரத சாரண சாரணிய மாவட்ட செயலாளர் திரு.அ.சிவக்குமார், ஊரிசு பள்ளி தலைமையாசிரியர் திரு.எபினேசர், உதவித் தலைமையாசிரியர் திரு.ஜான் பாபு, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.நெப்போலியன், அரசு பள்ளி தலைமையாசிரியர் திரு-கோ.பழனி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.கே.எம்.ஜோதிஸ்வர பிள்ளை, குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மனோகரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.ஜெய்சங்கர், பள்ளி துணை ஆய்வாளர் திரு.அ.மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணி வேலூர் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கியது. அண்ணா சாலை மக்கள் சந்திப்பு பழைய பேருந்து நிலையம் ராஜா தியேட்டர் வழியாக வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியை அடைந்தது. இந்த பேரணியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கெடுத்தனர்.
செய்தி வெளியீடு.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்