கழன்று ஓடிய கார் டயர்! 5 பேர் காயம்!
ஜி.கே.சேகரன்,
கார் டயர் கழண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு பெங்களூரு பகுதியை சேர்ந்த அருண் என்பவர் தனது குடும்பத்துடன் சென்றார். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை வெங்களாபுரத்தில் கார் முன்பக்க டயர் கழன்று ஓடியது.
சக்கரம் அடுத்தடுத்து பல இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
அதில் ராச்சமங்களம் பகுதியை சேர்ந்த வாசு(45), பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (36) அவரது மனைவி ரஞ்சிதா (31), மகன் ஹரீஷ்(9), புதூர்நாடு வலுதளம்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பரமசிவம் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இது தொடர்பாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே கார் டயர் கழண்டு அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களின் மீது மோதி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

admin
