நியூசிலாந்து மேப்பை காட்டி 2.71 கோடி அபேஸ்! தில்லாலங்கடி வாலிபர் கைது!
ஜி.கே.சேகரன்,
நியூசிலாந்து நாட்டு துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக 2. கோடியே 71 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி கைதானார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் படிக்காத வேலை இல்லாத நபர்களை குறிவைத்து ஒரு பிசினஸை தொடங்கினார்.
அதில், நியூசிலாந்து நாட்டில் உள்ள துறைமுகத்தில் படிப்புக்கேற்ற வேலையை வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களை காண்பித்து இட்டத்தட்ட¢ 44 நபர்களிடம் மொத்தம் 2 கோடியே 71 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
அவர் பணத்தை மட்டும் வசூல் செய்துக் கொண்டு எவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொட்டுக்கவில்லை.
இந்நிலையில் பணத்தை கட்டி ஏமாற்றமடைந்த நபர்கள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி மல்லகுண்டா பகுதியில் உள்ள பிரதீப் குமாரின் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திம்மாம்பேட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தரப்படும் என உறுதியளித்து அப்போதைக்கு அல்வா கொடுத்து கூட்டத்தை கலைத்தனர்.
அதனை தொடர்ந்து பிரதீப்குமார் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பிரதீப் குமார் அவரது நண்பர்களான நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஜியாவுல் ரகுமான் ஆகிய 3 பேர் மீது திம்மாம்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.
அப்படியிருக்க பிரதீப்குமார் திம்மாம்பேட்டை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஹரிஹரன் மற்றும் ஜியாவுல் ரகுமானை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

admin
