மசூதி இடத்தை அகற்ற வந்த அதிகாரிகள்! காலா படபாணியில் மும்பை தாராவில் பிரச்சனை!

  மசூதி இடத்தை அகற்ற வந்த அதிகாரிகள்! காலா படபாணியில் மும்பை தாராவில் பிரச்சனை!

ம.பா.கெஜராஜ்,

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசை குடியிருப்பு பகுதியாக மும்பை தாராவி உள்ளது. இங்கு தமிழகம் உட்பட  பல்வேறு மாநில மக்கள் வசித்து வருகின்றனர்.

  இந்நிலையில் தாராவியை மறுசீரமைப்பு செய்யும் டெண்டரை இந்தியாவின் பெரும் பணக்காரரான அதானி குழுமம் பெற்றது.

  இது அரசியல் ரீதியாக சர்ச்சை ஏற்படுத்தி உள்ள நிலையில் தாராவியில் உள்ள மசூதி கட்டடத்தின் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வருவதாக தகவல்கள் கசிந்தன.

  அதாவது தாராவியில் உள்ள மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதை இடிக்க ஜி-நார்த் பகுதியை   சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 9.00 மணி அளவில் வருவதை அறிந்த தாராவி மக்கள் அவர்கள் மசூதிக்கு வரும் வழிகளை அடைத்து அதிகாரிகள்  மசூதியை நெருங்காதபடி தடுத்து போராட்டம் நடத்தினர்.

  இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தியதால் பா.ரஞ்சித் எடுத்த காலா சினிமா போல் காட்சிகள் அங்கு அரங்கேறின.