ஒரே வாரத்தில் பேருந்து...ஆட்சியர் உறுதி!
ஜி.கே.சேகரன்,
ஆலங்காயம் அருகே பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பீமக்குளம் ஊராட்சி உட்பட்ட மந்தார குட்டை பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றன.
தொல் குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் துறை வரவேற்புரை வழங்கினார்.
அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் வழங்குவது குறித்தும் பேசப்பட்டன.

மற்றும் அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மலை ரெட்டியூர் பகுதி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விளையாட்டு மைதான பள்ளியில் விளையாட்டு மைதானம் வேண்டும் எனவும் புதிய வகுப்பறை கட்டிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பேருந்து வசதியும் உடனடியாக ஒரு வாரத்துக்குள் செய்து தரப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

admin
