பீஹாரில் பாஜக வெற்றி பெற்றது மதசார்பின்மை கட்சிகளுக்கு பாடம்! சொல்கிறார் முன்னாள்.எம் .எல் .ஏ.செ.கு.தமிழரன்!
ஜி.கே.சேகரன்,
பீஹார் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றது மதசார்பின்மை கொள்கை கொண்ட கட்சிகளுக்கு தகுந்த பாடமாக அமைந்தது - அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ கு தமிழரசன் வேலூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டமானது மாநில பொதுசெயலாளர் மங்காப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செ.கு.தமிழரசன் மற்றும் மண்டல தலைவர் தலித்குமார் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பீஹாரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, இது அவர்களுடைய சொந்த வெற்றி என்று கருத முடியாது. இருப்பினும் இது மதசார்பின்மை சக்திகளுக்கு ஒரு பாடம்.
ஏழை எளிய அடித்தட்டு மக்கள் சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து பல கருத்துக்களை மாறி மாறி ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
எவ்வளவோ தேர்தல் ஆணைய பிரச்சணைகள் இருக்கிறது ஆனால் வாக்காளர்கள் விளக்கபடுகிறார்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
நாங்கள் தமிழக அரசை 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம் உள்ளாட்சி பதவிகளில் ஆந்திரா கேரளா கர்நாடக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு பதவிகளில் இருக்கிறது.

ஆனால் திராவிடம் பேசும் தமிழகத்தில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை.
இதனால் ஆயிரக்கணக்கான தலித் பிரதிநிதித்துவம் மறுக்கபடுகிறது, இது சமூக அநீதி இதனை செய்ய வேண்டியது தமிழக அரசும் தமிழக அரசின் தேர்தல் ஆணையமும் தான்.
ஆனால் அரசியல் சட்டமோ மற்ற மரபுகளோ சொல்லுவது தேர்வு செய்யபடும் எல்லா தேர்தல்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்.
துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாதது சட்ட விரோதம். ரொம்ப காலமாக வலியுறுத்தி வருகிறோம் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்து 50 ஆண்டுகளாகிவிட்டது.
மற்ற மாநிலங்களில் தலித் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தினார்கள் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் தலித் மக்கள் தொகை உயர்ந்ததா இல்லையா? உயர்ந்திருந்தால் ஏன் இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை.
2001 ஆம் ஆண்டின் படி 20.7 சதவிகித மக்கள் ஆனால் தற்போது என்ன ஆனது தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை?
சிறப்பு தீவிரவாக்காளர் திருத்தத்தில் பீஹாரில் இருந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தப்பில்லை.
தமிழக மக்கள் வெளிமாநிலங்களில் வாக்காளர்களாக உள்ளனர், தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.
நிபந்தனை வைத்து கூட வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை அளியுங்கள் பீஹார் தேர்தல் இந்தியா கூட்டணிக்கு போலி மதசார்பின்மை தான் காரணம் என சொன்னார்.

admin
