பாமக தலைவர் அன்புமணியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

ஜி.கே.சேகரன்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
வேலூர்மாவட்டம்,பொய்கையில் உள்ள ரஞ்சன் மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்குமாவட்டம் சார்பில் பாமக தலைவர் அன்பு மணிராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் மருத்துவ முகாமானது நடைபெற்றது.
இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன்,மாநில துணை தலைவர்கள் இளவழகன்,என்,டி.சண்முகம் ,செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தனியார் மருத்துவமனையின் சார்பில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனைகள் ,நீரிழிவுநோய் பரிசோதனைகள்,ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம்,
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர், அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் மருத்துவமனையின் சார்பாக இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் சுப்பிரமணி பசுமைதாயகம் பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.