நேரடி அரசியலுக்கு வரப்போகுகிறாரா நடிகர் விஜய்!

உ.சசிக்குமார்,
தமிழ்திரை உலகில் அதிக ரசிகளை பெற்ற நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் மக்கள் பணிகளில் தலைக்காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதே போல், அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இடையே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் குதிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளையும் நடிகர் விஜய் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரசிகளை போட்டியிட வைத்து கனிசமான இடங்களில் வென்றனர்.
அப்படியிருக்க தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.
சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
இதனை முன்னிட்டு இப்போது அங்கு கூட்டம் கூடி வருகிறது.