கொலை விவகாரம்... சிறுவனை இழுத்துச் சென்ற போலீஸ்!

கொலை விவகாரம்... சிறுவனை இழுத்துச் சென்ற போலீஸ்!

கு.அசோக்,

சிறுவனை தல என்று இழுத்துச் சென்ற போலீசார், பதட்டம் ஏற்பட்டதால் அச்சம்.

குடியாத்தம் அருகே பிள்ளைகளுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்ததை தட்டிக் கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய வேண்டி மூன்று மணி நேரம் சாலை மறியல்.

ஐந்து நிமிடத்தில் சாலை மறியலை  கைவிட வேண்டுமென எச்சரித்த கோட்டாட்சியர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்து அதிரடி காட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .

கொலையாளி கொலை செய்வதற்காக செல்வதும் கொலை செய்து விட்டு செல்வதும் பேருந்தில் தப்பிச் செல்வதும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவரது மகன் நந்தகோபால் வயது 36 கட்டிட தொழிலாளி.

இவருக்கு அருணா என்ற மனைவியும் 13 வயது ஜெகன் 9 வயது பிரகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

அதே கிராமத்தை சேர்ந்த ரவி மகன் பிரேம் என்கின்ற பிரேம் குமார் டிராக்டர் ஓட்டும் கூலித் தொழிலாளியாக உள்ளார்.

இந்நிலையில் நந்தகோபால் என்பவருக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் பிரேம்குமார் நந்தகோபாலின் பிள்ளைகளுக்கு அருகே இருந்த கடையில் ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

நந்தகோபால் பிரேம்குமாரிடம் என்னுடைய பிள்ளைகளுக்கு நீ ஏன் ஜூஸ் வாங்கி கொடுக்கிறாய் என்று கேட்டதற்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அங்கே இருந்தவர்கள் இருவரையும் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளார்

 இருப்பினும் பிரேம்குமார் என்பவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் வீட்டிற்கு சென்று மீண்டும் நந்தகோபால் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறு செய்ததாகவும் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்  பிரேம்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தகோபாலின் நெஞ்சி மற்றும் விலாப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நந்தகோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது நந்தகோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே நந்தகோபால் இறந்த சம்பவம் அறிந்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் திரண்டனர் 
அங்கு மனைவி, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது.

நந்தகோபாலின் தாய் மகன் இறந்ததை கூட அறியாமல் மருத்துவமனையில் அவர் வாயில் தண்ணீர் ஊற்றி அவரிடம் பேசியது அனைவரின் நெஞ்சு உருக்குவதாக  இருந்தது.

இதனிடையே குற்றவாளி பிரேம்குமாரை கைது செய்ய வேண்டி நந்தகோபாலின் உறவினர்கள் பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களும் மற்றும் குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் வாகனங்களும் வழியில் நிறுத்தப்பட்டது.

இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ராபின்சன்,ராஜேஷ் கண்ணா,கேத்தரின் மேரி, பிரபு உள்ளிட்ட போலீசார் அங்கு வந்தனர். 

 சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை.

பின்னர் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற சாலை மறியலில் ஈடுபட வேண்டாம்.

காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் ஐந்து நிமிடத்தில் சாலை மறியல் போராட்டத்தை கைவிடும் படி எச்சரித்தனர்.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களை சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உத்தரவின் பெயரில் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தின் போது சிறுவன் ஒருவனை இரண்டு போலீசார் பிடித்துச் சென்று போலீஸ் பேனில் ஏற்றினர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் 3 தனி படைகளை அமைத்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பிரேம்குமார் கத்தி எடுத்துக் கொண்டு நந்தகோபால் வீட்டிற்கு செல்வதும் கொலை செய்து விட்டு திரும்பி வருவதும் பின்னர் அவ்வழியாக பேருந்தில் ஏறி தப்பி செல்வதும் சபதிவாகி உள்ளது

அதனை வைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.