இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2648 பேர் பதவி ஏற்பு! ஆட்சியர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்!
K.Asoke
இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு மற்றும் வாலாஜா,ஆற்காடு,சோளிங்கர்,நெமிலி,அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியேற்றுகொண்டனர்.
இராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் பதவியை ஏற்றுகொண்டனர்.
இதில் பாமக, திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சியின் சார்பிலும் சுயேட்சைகளும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதே போன்று சோளிங்கரில் ஒன்றிய குழு அலுவலகத்தில் பாமக. திமுக,அதிமுக, ஆகிய கட்சியினர் பதவியை ஏற்றுகொண்டனர். இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவியை ஏற்றுகொண்டனர்.
மேலும், ஆற்காடு,காவேரிப்பாக்கம்,நெமிலி,திமிரி,அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களின் ஒன்றிய குழு உறுப்பினர்களும் பதவியை ஏற்றுகொண்டனர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 13மாவட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் 127 ஒன்றிய குழு உறுப்பினர்கள் 288 கிராம ஊராட்சி தலைவர்கள் 2220 கிராம வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2648 பேர் பதவியை ஏற்றுகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin
