காவல் நிலைய வாசலிலேயே தீக்குளிக்க முயன்ற பெண்! – நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமுறல்!
செய்தி: கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமுறல் எழுந்துள்ளது.
காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும், கலவை பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக திவ்யா தரப்பில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, திவ்யாவின் தாய் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பப் பிரச்சினை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காவல் நிலையம் முன்பே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும் கூட காவல்துறையில் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், புகார்தாரர்கள் வயிறு எரிந்து சாபம் விட்டு விட்டு சென்றனர்

admin
