தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம்!
கு.அசோக்,
வேலூரில் சமுதாய நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆட்சியர் துவங்கி வைத்தார் இம்மாவட்டத்தில் 52 ஆயிரம் சமுதாய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது ஆட்சியர் பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் தொரப்பாடியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேலூர் மாநகராட்சியின் சார்பில் நீகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் இம்மாவட்டத்தில் தெருக்களில் சுற்றி திரியும் சமுதாய நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமினை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா ஆகியோர் துவங்கி வைத்தனர்,

இதில் கால்நடைத்துறை அதிகாரிகள் அந்துவன்,பாண்டியன் திருக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இந்த தடுப்பூசி முகாமானது 22 ஆம் தேதி முதல் நடக்கிறது.
குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி,மற்றும், ஊரக பகுதிகளில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு இந்த வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடபடுகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் 52 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு அவைகளுக்கும் தடுப்பூசியானது போடப்படும் வேலூர் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் கால்நடை மையங்களில் செய்யப்படவுள்ளது என நிகச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசினார்.

admin
