உல்லாசத்துக்காக துரோகம் செய்த மனைவி:- கண்டித்த கணவன் கொலை!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
துரோகம் செய்த மனைவியை கண்டித்ததால் கணவனை பத்தினி பெண்டாட்டி கொலை செய்திருக்கிறாள்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்துரை, பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள் (எ) உமா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேல்துரை தனது மனைவி, குழந்தைகளுடன் அடைக்கலப்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்திற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பணிக்கு பஸ்சில் சென்றுவந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகமாக வந்த ஒரு கார் மோதியதில் வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, காரை ஓட்டிவந்தது பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். அதில் திடீர் திருப்பமாக இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.
அதில், வேல்துரை தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் என்ற சுதாகர் இவருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும், வேல்துரை பணிக்கு சென்ற பின்னர் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதனை அறிந்த வேல்துரை 2 பேரையும் கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், பேச்சியம்மாள் ஆகியோர் வேல்துரையை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
பின்னர் சுதாகர் தனது நண்பரான கார் டிரைவர் ஆறுமுகம் உதவியுடன் வேல்துரையை காரை ஏற்றி படுகொலை செய்துள்ளார்.
விசாரணையில் இந்த திடுக் விவரங்களை கண்டுபிடித்த போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி சுதாகர், பேச்சியம்மாள், ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
உல்லாசத்துக்காக கணவனை திட்டமிட்டு கொலை செய்திருக்கும் பத்தினியால் அவரது உறவுகள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

admin
