முதல் 285 தொகுதிகளில் அதிகம் இடங்களை வென்றெடுப்பவர்களே ஆட்சி அமைப்பர்!

முதல் 285 தொகுதிகளில் அதிகம் இடங்களை வென்றெடுப்பவர்களே ஆட்சி அமைப்பர்!

ம.பா.கெஜராஜ்,

 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கியது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குபதிவு கேரளா மற்றும் கர்நாடாக மாநிலங்கள் உள்ளிட்ட 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் நடைபெற்றது. இவற்றில் மணிப்பூர் மற்றும் வட மாநிலங்களும் உள்டங்கியிருக்கிறது.

 அதே போல் மூன்றாம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகளுக்கு மே மாதம் ஏழாம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.

 அதன் பின்னர்  மே 13, 20, 25 மற்றும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி என முறையே மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெறவிருக்கின்றன. 

  மக்களவை தொகுதிகள் 544 உள்ள நிலையில், முதல் மூன்று கட்ட தேர்தலில் இடம் பெறும் 285 தொகுதிகள் மிகவும் முக்கியமாகும்.  ஆம் இவைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.

  இங்கு பாஜக வுக்காக ஓட்டு கேட்கும் மோடி 400 சீட்டை தேசிய ஜனநாயககூட்டணி பிடிக்கும் என்று சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார்.

  அதே கருத்தை மத்திய நியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேற்று தெரிவித்திருக்கிறார்.

  ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:

   வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த (விகிசித் பாரத்) நாடாக்க பிரதமர் உறுதி பூண்டுள்ளார். இதற்கு நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். மேலும் இந்த இலக்கை எட்டுவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

  செயற்கை நுண்ணறிவு திட்டத்தை மேம்படுத்துவதில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகள் கிடைக்கும். பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

 அதாவது  அரசமைப்பு சட்டம் 370 ஞாபக்கபடுத்துகிறார்களாம். சரி இருக்கட்டும் இவர்கள் சொல்வதை போல 370 முதல் 400 சீட்டுகளை பிடிக்கவேண்டுமானால் மேற்படி மூன்று கட்ட தேர்தல்களில் பங்கேற்ற, பங்கேற்கும் 285 தொகுதிகளில் 200 சீட்டையாவது பிடிக்க வேண்டும்.

 ஆனால் கள நிலவரம் இந்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். இத்தனைக்கும் இந்த 285 தொகுதிகளில் வட இந்திய மாநிலத்தில் உள்ள தொகுதிகள் சில உள்ளதை நினைவுகூற வேண்டும்.  அதே போல் மேலும் நான்குகட்ட தேர்தலில் பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா டெல்லி என பாஜகவுக்கு தலைவலி ஏற்படுத்தும் மாநிலங்களும் உள்ளதை மறுக்க முடியாது அல்லவா?