அமைச்சர்களுடனான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் முறிவு!

அமைச்சர்களுடனான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் முறிவு!

ம.பா.கெஜராஜ்,

 சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தோல்வியில் முடிந்தது.

 பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவினர், பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசவே இல்லை. எனவே எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்பது முதலமைச்சருடன் தான் என்று அறிவித்தனர்.