மருது சகோதரர்களுக்கு ஆந்திராவில் சிலை!

 மருது சகோதரர்களுக்கு ஆந்திராவில் சிலை!

மிகுஒளியான்,

இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் ஆளுயர சிலை ஆந்திராவில் திறப்பு.

தமிழக விடுதலை வீரர்களுக்கு ஆந்திர மண்ணில் சிலை அமைக்கப்பட்டது.  அதில் சித்தூர் எம்.எல்.ஏ, மேயர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர். 

இந்தியாவை அடிமைப்படுத்த முயன்ற ஆங்கிலேயர்களை நம் இந்திய  மண்ணிலிருந்து விரட்டியடிக்க 1785 ஆண்டுகள் முதல் 1801 ஆம் ஆண்டுகள் வரை தொடர் போராட்டம் நிகழ்த்தி ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் மருது சகோதரர்கள்.

 இவர்களின் சிலை தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதை அடுத்து தற்போது ஆந்திர மாநிலத்தில் சித்தூர் கங்கினனேனி ஏரிக்கரை ஓரம் பிரம்மாண்ட அளவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 இதற்கென ஆந்திர மாநில முதலியார்கள் சங்கத் தலைவர் புல்லட் சுரேஷ் மருது சகோதரர்களின் முழு அளவு வெண்கலச் சிலையை தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார்.

 இதன் திறப்பு விழாவில் சித்தூர் எம்.எல். ஏ. ஜெகன் மோகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சித்தூர் மாநகர மேயர் அமுதா, முன்னாள் சித்தூர் முனிசிபல் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

 நிகழ்ச்சியின் முழு ஏற்பாடுகளை சாய் பாலாஜி செய்திருந்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு  ஆந்திர மாநில முதலியார்கள் சங்க தலைவர் புல்லட் சுரேஷ், மதுரை வரிச்சியூர் செல்வம், மதுரை மருது சேனா தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 அப்பொழுது புல்லட் சுரேஷ் கூறும் பொழுது இந்த சிலையை நிறுவுவதற்கு இடம் தேர்வு செய்து கொடுத்தும் 20 லட்ச ரூபாய் பங்களிப்பு  நிதியாக அளித்தும் உதவிய ஆந்திர அரசுக்கும் ஆந்திர மக்களுக்கும் முழு அளவில் ஆதரவு அளித்த ஆந்திர மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.