ஒரு வாரத்தில் ரூ.75 கோடி வரும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
பாண்டியன் மதகை சீரமைக்க மேலும் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - அதிமுக ஆட்சியில் இருந்த போதும் அதிக கடன் வாங்கியுள்ளனர் அவர்கள் மீதும் விசாரணை கமிஷன் தேவை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ.24. 82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இவ்விழாவில் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜானகி மற்றும் துணை மேயர் சுனில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று தடுப்பணையை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் நீர் வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் அரும்பருத்தி கிராமத்தில் வெள்ளம் வந்தால் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையிலும் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் பல ஊர்களில் அணைகளை திறந்து வருவதை போல் இந்த அரும்பருத்தி கிராமத்திலும் திட்டம் முடிக்கப்பட்டு அணையை திறந்துள்ளோம்.
நான் மாணவனாக இருக்கும் போது அண்ணா அவர்கள் இந்த ஊரில் கொடியேற்றினார். இதுமட்டுமல்லாமல் நான் இக்கிராமத்திற்கு சாலை அமைத்து கொடுத்தேன் ரூ.50 லட்சத்தில் மேலும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவைகளும் புதியதாக கட்டி நானே திறந்து வைத்தேன்.
இதோடு மட்டுமல்ல கிட்டத்தட்ட அம்முண்டி வரையில் பாலாற்றை ஒட்டி விவசாயம் தான். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். காரணம் நானும் விவசாயி தான் நாற்று நட்டுள்ளேன் பிரம்பு அடித்துள்ளோம் கத்தரிக்காய் பறித்து கொண்டு சென்று விற்றுள்ளேன்.
அதனால் தான் அமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு மின் கட்டணம் கட்ட வேண்டாம் என இலவச உத்தரவு போட்டவன் இந்த துரைமுருகன் தான்.
ஆகையால் பம்பு செட் கரன்ட் எல்லாவற்றிற்கு சென்றாலும் நாங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். காவனூர் ஏரி நிரம்பினால் கோடி போக்கும் அந்த தண்ணீர் பாண்டியன் மதகுக்கு வரும் ஆனால் அதன் அருகில் தனி நபர் நிலம் உள்ளது.
அவர் கையை வைக்கவிடவில்லை நான் நிரந்தரமாக பாண்டியன் மதகை சீர் செய்ய நிதி ஒதுக்கியுள்ளேன் 75 கோடி ரூபாய் சட்டசபையில் இன்னும் ஒரு வாரத்தில் பணம் வந்துவிடும்.
டெண்டர் விடப்படும் ஏரியிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீரை கொண்டு வந்துவிட்டால் என்றைக்கும் தண்ணீர் பஞ்சம் இக்கிராமத்திற்கு வர கூடாது என தடுப்பணையை திறந்துள்ளோம். பல இடங்களில் தடுப்பணைகளை கட்டவுள்ளோம் அது தான் தண்ணீரை காப்பாற்றும் தமிழக முதல்வர் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்து வருகின்றார் என பேசினார்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் தான் அதிக கடன் வாங்கியுள்ளனர் எங்கள் மீது விசாரணை கமிஷன் வைத்தால் அவர்கள் மீதும் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கூறினார்.