இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்!
ம.பா.கெஜராஜ்,
தவெக வின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
அப்படியிருக்க ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கே.ஏ. செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
சம்பவம் பெரும் சிரிப்பலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு தொகுதி தவெக வேட்பாளரின் சிறப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அவர், பேச்சின் வேகத்தில் திடீரென, வரும் தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
சட்டென சமாளித்த செங்கோட்டையன்
தவெக மேடையில் அதிமுகவின் சின்னத்திற்கு அவர் வாக்கு கேட்டதும், மேடையில் இருந்தவர்களும் தொண்டர்களும் ஒரு நிமிடம் திகைத்தனர். உடனடியாகத் தனது தவறை உணர்ந்த செங்கோட்டையன், சற்றும் பதற்றப்படாமல் சிரித்துக்கொண்டே, மன்னிக்கவும்.. பல ஆண்டுகளாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கேட்டு நாக்கு பழகிவிட்டது.
அதுதான் தெரியாமல் வந்துவிட்டது என்று சாதுர்யமாகக் கூறி அந்தச் சூழலைச் சமாளித்தார்.

admin
