கையறு நிலையில் ராமதாசு!   பா.ம.க.வை உடைத்துக் கொண்டிருக்கிறதா பா.ஜ.க.? எலி தவளையால் சிக்கல்!

கையறு நிலையில் ராமதாசு!    பா.ம.க.வை உடைத்துக் கொண்டிருக்கிறதா பா.ஜ.க.? எலி தவளையால் சிக்கல்!

ம.பா.கெஜராஜ்,

பாமகவில் நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்களுக்கு பாஜகவின் பிரித்தாளும் செயல்பாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது.

  இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாசு நேற்று அளித்த பேட்டியை பார்கிற பொழுது அவர் தற்போது கையறுந்த நிலையில் தான் உள்ளார் என்பதை வெளிச்சமாகிவிட்டது.

 பாஜக வை பொறுத்தவரையில் அவர்கள் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் தாமரையை மலரச்செய்ய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மாநிலங்களில் பவராக உள்ள கட்சிகளின் தலைவர்களுடைய ஜாதகத்தை அதாவது பலம் மற்றும் பலவீனத்தை கையில் எடுத்துக் கொண்டு சாட்டையை சுழற்றுகின்றனர்.

  இந்நிலையில் தமிழகத்தில் மகனுக்காக கொள்கையை விட்டுக் கொடுத்த ராமதாசு பாமக தொடங்குவதற்கு முன்பிலிருந்தே அவரது சமூகத்துக்காக பாடுபட்ட பலரை அம்போ என்று விட்டுவிட்டார். பலர் சொத்து சுகங்களை இழந்தனர். தாங்கள் செய்து வந்த பணிகளையும் துறந்தனர். அவர்களில் குறிப்பாக பேராசிரியர் தீரனை சொல்லலாம் என்று புகைந்துக் கொண்டிருந்தது. 

 இரவெல்லாம் பொதுக்கூட்டங்களை நடத்திவிட்டு அதிகாலையில் பிரபல இதழ்களின் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து இதழ் ஆசிரியரை பார்த்து நாட்டு நடப்புகளை அறிந்து அய்யாவுக்கு சொன்னவர். ஆனால் இன்று? இது போல எண்ணற்றவர்கள் இருக்க மகனுக்கு மந்திரி போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

 அன்புமணியின் என்ட்ரிக்கு முன்னதாக மத்திய கேபினெட் அமைச்சரவையில் பங்கேற்க பாமகவிற்கு வாய்ப்பு கிடைத்த போது தலித் எழில்மலை, ஏ.கே.மூர்த்தி போன்ற சாமன்யர்களுக்கு அந்த பதவிகளுக்கு அனுப்பிவைத்தவர் அய்யா.

  ஆனால் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வெறும் கை காட்டப்பட்டது.

 இந்த பிரச்சனையெல்லாம் கட்சிக்குள் புகையாமல் இல்லை. ஆனால் அய்யாவை கடந்து எதுவும் பேச முடியாது பாமகவில். 

   இதையெல்லாம் உன்னிப்பாக பார்த்து வந்த பாஜக தற்போது பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து கட்சியை உடைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பார்த்தால் மகாராஷ்டிரா, பீகார், ஒடிசாவைப் போலவே தமிழகத்திலும் பாஜக அதன் கைவரிசையை வெளிக்காட்டியிருக்கிறது.

   ஆக ஏற்கனவே அதிமுக இப்போது பாமக,.

 அந்த வகையில்,  இன்றைக்கு எலி தவளை போல் பா.ம.க.மாறிவிட்டது. ஒருப்பக்கம் தண்ணீருக்குள் இழக்க மறுபக்கம் தரைக்கு இழுக்கப்படுகிறது பாமக.

   பாஜக பக்கமே தொடர்ந்து இருக்க முற்படும் அன்புமணி அதற்காக தொடர் தோல்விகளை கட்சிக்கு ஏற்படுத்தி வருகிறார் என்பது அய்யாவின் எண்ணம். அதில் உண்மையும் இருக்கிறது. 

  2016 ஆம் ஆண்டு தமிழக சட்டபேரவை தேர்தலில் அன்புமணி அமெரிக்க தேர்தலைப் போல மேடையில் தோன்றி நடந்துக் கொண்டே வாக்கு சேகரித்தார். அதற்கு பெரும் பணம் விரயம் ஏற்பட்டது. அதற்கு அய்யா அனுமதித்தார், அந்த தேர்தலில் அன்புமணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே அதற்கு காரணம்.

  ஆனால் அவர்களது ஆசையில் அப்போது மண் விழுந்துவிட்டது. அப்போது மட்டுமல்ல 2021 மற்றும் 2024 தேர்தல்களில் பாமகவுக்கு தோல்வியே.

  இந்த இடத்தில் மீண்டு நினைவு படுத்தக்கூடிய விஷயமாக இருப்பவர்கள் உழைத்தவர்களே.  எது எப்படியிருந்து.  5 சவிகித வாக்குவங்கியை வைத்திருக்கும் பாமக வை பாஜக கரைத்து வருகிறது.