மியான்மர் நில நடுக்கம்! 1000 பேருக்கு மேல் உயிரிழப்பு! 30 அடுக்கு மாடி தரை மட்டம்!!
மோனிஷா வில்லியம்ஸ்,
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் மியான்மர், சீனா உள்ளிட்ட பகுதிகளிலும் ஏற்பட்டது, இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000-கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 732 பேர் காயமடைந்தனர் என்று நேற்று இரவு தகவல் வெளியானது.
மியான்மரில் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாகவும், இதனால் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, சாலையில் நின்றிருந்த வாகனங்கள், தண்டவாளத்தில் நின்றிருந்த ரயில்கள் குலுங்கின. பல இடங்களில் மின் இணைப்பு, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மியான்மர் அட்மினிஸ்ட்ரேஷன் தயார் நிலையில் இல்லை. இதனால் அங்கு அவசரநிலை அறிவித்துள்ள ராணுவத் தலைவர் மின் அனுக் லாய்ங், சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளார்.
இந்தியா முழு உதவியை வழங்க தயாராக உள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கிறாது
மியான்மர் நிலநடுக்கத்தின் எதிரொலி தாய்லாந்திலும், சீனாவிலும் நிகழ்ந்தது.
மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. சீனாவில் புதியதாக கட்டப்பட்டுவரும் 30 அடுக்கு மாடியின் கட்டிடம் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்களில் தங்கியிருந்த பலரது நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. பலரை காணவில்லை. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடக்கும் என கூறப்படுகிறது.

admin
