சார்-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!முதல்வ ர்!
ம.பா.கெஜராஜ்,
தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்பதற்காக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிவுற்ற பின்னர் முதலமைச்சர் தெறிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் சார்-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை இசிஐ ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் சார் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வ˜ முகஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளா˜.
இந்நிலையில் பங்கேற்றது 49; புறக்கணிப்பு 11: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.திமுக நிர்வாகிகள் குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றன. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி (திராவிடர் கழகம்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக).
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), கமல்ஹாசன் (மநீம), காதர் மொகிதீன் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜவாஹிருல்லா (மமக).
தமிமுன் அன்சாரி (மஜக), பார்த்தசாரதி (தேமுதிக), வசீகரன் (ஆம்ஆத்மி),கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) உட்பட 49 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக, பாஜக மற்றும் பாமகவில் அன்புமணி தரப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. தவெக, நாதக, ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட 11 கட்சிகளை அழைத்தும் அவை சா˜பாக எவரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தவெக தமது அறிக்கையில் இதே தீ˜மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கலாமே என்று குறிப்பிட்டுள்ளது.

admin
