கூடுதலாக கல்லா கட்டும் டாஸ்மாக்! அதிகரிக்கும் குடிமகன்கள்!

கூடுதலாக கல்லா கட்டும் டாஸ்மாக்! அதிகரிக்கும் குடிமகன்கள்!

 டி.இ.முகமது,

  தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் கள்ளச்சாராய நிகழ்வுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் கொதிப்பதும் பின்னர் அடங்குவதுமாக இருந்து வருகிற போதிலும், அரசு மதுபான கடைகளின் வருமானம் எக்கச்சக்கமாக கூடிக் கொண்டே போகிறாது.

 கடந்த 2022 - 23-ம் நிதியாண்டில் ரூ. 44,121.13 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம், 2023 - 24-ம் நிதியாண்டில் ரூ.45,855.67 கோடியாக உயர்ந்திருக்கிறது.  ஒரே வருடத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.1,734.54 கோடி உயர்ந்திருக்கிறது.

   டாஸ்மாக்கில் சில்லறை விற்பனை தொடங்கப்பட்ட 2003-ம் ஆண்டு முதல் இப்போது வரை ஆண்டுக்கு எவ்வளவு வருமனத்தை ஈட்டுகிறது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

  அந்த வகையில், 2003- 04ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.3,693.93 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி, 2004 - 05-ம் நிதியாண்டில் ரூ. 4,872.03 கோடி வருமானமும், 2005- 06ம் நிதியாண்டில் 6,030 கோடி வருமானமும் கிடைத்துள்ளது. அதுவே, 2006-07ம் நிதியாண்டில் ரூ. 7,473 கோடியாக அதிகரித்துள்ளது.

  தொடர்ச்சியாக, 2007- 08-ம் நிதியாண்டில் - ரூ. 8,821.16 கோடி, 2008- 09 நிதியாண்டு - ரூ.10,601 கோடி, 2009-10-ம் நிதியாண்டு ரூ.12,498 கோடி, 2010-11-ம் நிதியாண்டு - ரூ.14,965.42 கோடி, 2011 - 12 நிதியாண்டு - ரூ.18,081.16 கோடி, 2012 - 13 - 21,680 கோடி, 2013- 14-ம் நிதியாண்டு - ரூ. 21,674.89 கோடி, 2014-15-ம் நிதியாண்டு - ரூ.24,164 கோடி. 2015 - 16ம் நிதியாண்டு - ரூ.25,845 கோடி, 2016 - 17-ம் நிதியாண்டு - ரூ.26,995 கோடி, 2017 - 18 -ம் நிதியாண்டு - ரூ.26,797 கோடி, 2018 - 19-ம் நிதியாண்டு - ரூ.31,157 கோடி, 2019 - 20-ம் நிதியாண்டு - ரூ.33,133.24 கோடி, 2020 - 21-ம் நிதியாண்டு - ரூ.33,811 கோடி, 2021 - 22-ம் நிதியாண்டு - ரூ.36,050.65 கோடி, 2022 - 23-ம் நிதியாண்டு - ரூ.44,121 கோடி, 2023 - 24-ம் நிதியாண்டு - ரூ. 45,855.67 கோடி. என கிடுகிடுவென வருமானம் ஏறிக்கொண்டே இருக்கிறது.

 இதில் விலையேற்றம் ஒருபக்கம் காரணமாக இருந்தாலும் கூட, குடிமகன்கள் அதிகரித்துவிட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.