ரோந்து பணியால் அசதி! உயிரிழந்த தலைமைக்காவலர்!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு மீது மோதி விபத்து. தலைமை காவலர் உயிரிழப்பு.
பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சோகம்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா நேரில் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக காளிதாஸ் பணியாற்றி வந்துள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைக்கிராமத்தை சேர்ந்த அவர் நாட்றம்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல பணியை முடித்துவிட்டு நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வாணியம்பாடி புதூர் பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது உறக்க கலக்கத்தில் எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு வேலியில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலை மற்றும் முகம் தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்து தலைமை காவலர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் பிரேதத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாதுணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
