மணிப்பூர் கலவரத்தை கண்டித்து அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!
கு.அசோக்,
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு சட்டக்கல்லூரியின் நுழைவாயிலில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் பழங்குடியின பெண்கள் கொடுமைப்படுத்திவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கையில் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
அங்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

admin
