கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு!

கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு!

 க.பாலகுரு,

  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சுந்தரத்தின் பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் கணக்கை தொடங்கி பொதுமக்களுக்கு சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

  இதை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம்,திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி முகநூல் கணக்கு செயல்பட்டுவருகிறது. இதை பொதுமக்கள் யாரும் பின்தொடர வேண்டாம்  என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிவித்ததுடன் மாவட்ட ஆட்சியரின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு இதுவே என்று ஆட்சியரின் ஒரிஜினல் கணக்கை வெளியிட்டிருக்கிறது.