முதல்வர் விஜயின்முதல் கையெழுத்து 200 யூனிட் இலவச மின்சாரம்! அரசின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.... ஆடி பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம் எச்சரிக்கை!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் விஜய் ஆவேசமாக பேசியதாவது, தமிழக அரசில் 10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்று இருக்கிறார்கள் கஜானாவை வழித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.
உள்ளே போனால் தான் தெரியும் எது உள்ளது எது இல்லை என்று.
எது எங்கு இருக்கிறது என்பது பிறகு தான் தெரியும்.
அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
அதேபோல் இங்கு இருப்பவர்கள் ஆடி பார்க்கலாம் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை இத்துடன் அழித்து விடுங்கள்.
இங்கு பவர் செக்டார் ஒரு இடத்தில் தான் இருக்கிறது அது நான் தான். அங்கு ஒரு பவர் இங்கு ஒரு பவர் என்று கிடையாது.
மேலும் அவர் அரசுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கும் டிவிகே வினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி சொன்னார்.
முன்னதாக அனைவரின் மத்தியிலும் மூன்று திட்டங்களை அறிவித்தார்.
அதில் மின்சார கட்டணம் 200 யூனிட் இலவசம் என்றும், போதைப் பொருளை ஒழித்திட மாவட்டந்தோறும் சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும், அதேபோல் பெண்கள் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் அரசு சிங்கப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்று அங்கு மூன்று கோப்புகளில் கையெழுத்து போட்டார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல்வருக்கு மலர் செண்டுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை சட்டப்பேரவையில் பதவி ஏற்க உள்ளனர்.
அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
1967 1977 க்கு பிறகு அதே பாணியில் விஜய் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.

admin
