குடியாத்தம் குமரன் மீது மீண்டும் ஒரு புகார்!

ஜி.கே.சேகரன்,
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிராமதாஸ் ஆகியோரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் புகார் மனுவை அளித்தனர்
இராணிப்பேட்டைமாவட்ட பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்றை அவர்கள் அளித்தனர்.
அதில் குடியாத்தத்தை சேர்ந்த திமுக பேச்சாளர் குமரன் என்பவர் 360 என்ற யூடியூப் சேனலில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் ஆகியோரை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டுக் கொண்டனர்.