இபிஎஸ்ஸை மடக்கி கலாய்த்த அதிமுகவினர்!

அ.கண்ணன்,
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர்.
அதிமுக ஒருங்கிணைய வலியுறுத்தி இபிஎஸ் செல்லும் வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர். இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.