பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த பாம்பு! மாணவியை கடித்தது!
கு.அசோக்,
அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி பள்ளி வகுப்பறையின் கதவை திறக்கும் பொழுது கடும் விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்து வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த கோவிந்த சேரி குப்பம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரது மகள் கனிஷ்கா(14) இவர் ஒழுகூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு ஏ பிரிவில் கல்வி பயின்று வருகிறார்.
நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கனிஷ்கா பள்ளியின் வகுப்பறை கதவை திறந்த போது கதவின் மீது இருந்த கடும் விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு கனிஷ்காவின் வலது கையின் மீது விழுந்து முட்டியின் அருகாமையில் கடித்துள்ளது.
பாம்பு கடித்ததை அறிந்த மாணவி கனிஷ்கா கத்தி கூச்சல் இட்டதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மனைவியை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
கனிஷ்காவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தற்போது முழுமையான சிகிச்சையை வழங்கி உள்ளனர்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் கனிஷ்காவை 24 மணி நேரம் வைத்துக் கொள்ளும் விதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா.
¢பள்ளியில் மாணவியை கடும் விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்திருக்கும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் வகுப்பறைகளின் கட்டிடங்களுக்கு அருகாமையில் புகார் மண்டி கிடைப்பதால் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பூச்சிகள் போன்றவை நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

admin
