திருப்பத்தூர் செய்தியாளர்களை மிரட்டிய வாய்தா பார்ட்டி!  மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

திருப்பத்தூர் செய்தியாளர்களை மிரட்டிய வாய்தா பார்ட்டி!   மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

க.பாலகுரு,

 மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 7 மணி நேரம் சோதனை கணக்கில் வராத ஒரு லட்சத்து 22,100 ரூபாய் பறிமுதல் செய்தனர். 

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை  ஒட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து ஒவ்வொரு அரசுத்துறை நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திற்கு  திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நந்தகோபால் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ,சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மாலை 3 மணி அளவில் நகராட்சி அலுவலகத்திற்கு இரண்டு ஜீப்புகளில் வந்தனர்.

   அவர்கள் நகராட்சி அலுவலகம் முழுவதும் சீல் செய்து அங்கு பணியாற்றக்கூடிய அனைத்து பணியாளர்களிடமிருந்து செல்போன்களை வாங்கிக் கொண்டனர்.

  அதன் பிறகு ஒவ்வொருவராக அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் அதற்கான கணக்குகளை சரி பார்த்தனர் . நகராட்சி அலுவலகத்துக்குள் நின்றிருந்த பொது மக்களையும் அவர்கள் பிடித்து எதற்காக இங்கு நிற்கிறீர்கள் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்றெல்லாம் சோதனையில் ஈடுபட்டனர்.

  இந்த சோதனையானது இரவு 9 மணி வரை நடந்து கொண்டிருந்தது. சோதனையின் முடிவில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாயை பல்வேறு நகராட்சி அலுவலர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

  மேலும் அங்கு பணியாற்றக்கூடிய 25க்கும் மேற்பட்ட ஆண்,பெண் ஊழியர்கள் அனைவரும் ஓர் அறையில் அமர வைத்து அவர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  தீபாவளிக்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  குறிப்பு:- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றில் உள்ள அதிகாரியின் தந்தை வக்கீலாம். அதனால் அங்கு சோதனை நடத்தினால் அவ்வளவுதான் என்று அதிகாரிகளை மிரட்டினாராம். அதே போல் செய்தியாளார்களையும் மிரட்டும் தொணியில் வம்பிழுத்து வீடியோ எடுத்து வீட்டில் வைத்துக் கொண்டாராம்.

அப்புறம் வேறென்ன செய்வார் அந்த வாய்தா பார்ட்டி?