34 பைக்குகள் பறிமுதல்! கொள்ளையன் கைது!

34 பைக்குகள் பறிமுதல்! கொள்ளையன் கைது!

கு.அசோக்

 வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்த நபர் காட்பாடியில் கைது அவரிடமிருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

 வேலூர்மாவட்டம், வேலூர் காட்பாடி - சித்தூர் பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்குரிய ஆவணங்களை கேட்ட போது அது கொள்ளையடித்த வண்டி என தெரியவந்தது.

   போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது கார்த்தி (37), திருநின்றவூர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் இவர் காட்பாடி வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்து விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

 அவரிடமிருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.13 லட்சமாகும் இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து வந்த கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.