சிறையில் அடைக்கப்பட்டார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் !

சிறையில் அடைக்கப்பட்டார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன்  !

ம.பா. கெஜராஜ்,

பாலியல் தொல்லை தந்த கல்லூரி துணை முதல்வருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை தந்த ஊரிசு கல்லூரி துணை முதல்வர் வேலூர்  நீதிமன்றத்தில் ஆஜர்

15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது

 வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைப்பு

வேலூர் மாவட்டம் வேலூர் நகரின் மையப் பகுதியில் உள்ள   ஊரிஸ் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன்.

இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண்  விரிவுரையாளருக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த மாதம்  பதினெட்டாம் தேதி புகார் செய்தார்.

இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலிசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 
இருந்தபோதும் குற்றம் சாட்டப்பட்ட நபரான அன்பழகனை போலீசார் தேடவில்லை என்கின்ற பேச்சு நிலவியது.

இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதிகல்லூரி மாணவ,மாணவிகள் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று அன்பழகனை கைது செய்ய கோரி  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்த போதும் போலீசார் மெத்தனம் காட்டி வந்த நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் என்கின்ற அமைப்பின் மாவட்ட செயலாளர் செரிப் பாஷா  என்பவர் கடந்த ஏழாம் தேதி அன்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம், ராசன பள்ளியில் பதுங்கி இருந்த அன்பழகனை நேற்று   அதிகாலை  கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்

இன்று வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிலா நீதிமன்றத்தில்  அன்பழகன் ஆஜர் படுத்தப்பட்டார்.

பின்னர்  15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து அன்பழகன் போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது ஒரு புறம் இருக்க சிறைச்சென்றிருக்கும் அன்பழகனின் ஆதரவாளர்கள் சிலர் புகார் தாரரையும் புகாரின் அடிப்படையில் வெளியான செய்திகளை பதிவிட்ட பத்திரிகையாளர்களையும்கொச்சைப்படுத்தும் விதமாக whatsapp செய்திகளை பரப்பினர்.

இருந்த போதும் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.

குறிப்பு:-நேற்று  எட்டாம் தேதி அதிகாலை சித்தூர் மாவட்டத்தில் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட அன்பழகனை ஊடகவியாளர்கள் புகைப்படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் மிகவும் அக்கறை காட்டினர்.

அதுதான் என்ன ரகசியம் என்று தெரியவில்லை.