பின்தங்கிய 20 மாவட்டங்கள்! அன்புமணி பேச்சு!

பின்தங்கிய 20 மாவட்டங்கள்! அன்புமணி பேச்சு!

 கு.அசோக்,

  தமிழகத்தில் 20 மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன அவைகளுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்ற வேண்டும்  அன்புமணிராமதாஸ் பேச்சு.

 இராணிபேட்டைமாவட்டம், லாலாப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தை பாமக நிர்வாகி எல்.வி.மணியின் திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது.

 இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் அரங்க வேலூர்,என்.டி.சண்முகம்.மாநில துணை தலைவர் இளவழகன் நிர்வாகிகள் சரவணன் ,நல்லூர் சண்முகம்,வெங்கடேசன்,அ.ம.கிருஷ்ணன், எம்கே முரளி உள்ளிட்ட திரளான பாமகவினர் இதில் கலந்துகொண்டனர்

   விழாவில்  அன்புமணி ராமதாஸ் பேசுகையில் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் 11 மே அன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடத்துகிறோம் இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

  தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய சமுதாய மக்களுக்கு ஏற்ப அந்தந்த சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.

 அதே போல் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும் அரசு அதனை செய்ய முன் வர வேண்டும்.

 தமிழகத்தில் 20 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்களாக உள்ளன இவைகளுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி குறிப்பாக 15 வடமாவட்டங்கள் பின் தங்கியுள்ளது கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் அடைய வழி வகை செய்ய வேண்டும் இந்த கோரிக்ககளுக்காக தான் மாநாட்டை நடத்துகிறோம் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென பேசினார்.