பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும், தி.மு.க. எம்.எல்.ஏ. கனிமொழியும் அறிவாலயத்தில் சந்திப்பு!

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும், தி.மு.க. எம்.எல்.ஏ. கனிமொழியும் அறிவாலயத்தில் சந்திப்பு!

 ம.பா.கெஜராஜ்,

 மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

 தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்

நடந்த இந்த திருமண விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  திருமண விழாவில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டார்.

 அப்படியிருக்க, இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தி.மு.க. எம்.பி. கனிமொழியை, வானதி சீனிவாசன் சந்தித்தார்.

  இருவரும் மாறி மாறி நலம் விசாரித்து உற்சாகமாக பேசிக் கொண்டனர்.